விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், கெயில் திட்டங்களுக்கு அனுமதியளித்தது திமுக அரசுதான்:தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், கெயில் திட்டங்களுக்கு அனுமதியளித்தது திமுக அரசுதான்:தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றச்சாட்டு

புதன், பெப்ரவரி 17,2016,

மீத்தேன் மற்றும் கெயில் திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் தான் அனுமதியளிக்கப்பட்டது. இப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருவது நகைப்புக்குரியது என தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றம் சாட்டினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா, ஆம்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 15 மாதங்களாக மக்கள் பிரச்சினைகள் குறித்து தமாகா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மீத்தேன், கெயில் போன்ற திட்டங்களுக்கு திமுக அரசு தான் அனுமதியளித்தது. தற்போது இத்திட்டங்களுக்கு திமுக பிரமுகர்களே எதிர்ப்பு தெரிவித்து, கருத்து வெளியிட்டு வருவது நகைப்புக்குரியது.என  யுவராஜா தெரிவித்தார்.