விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல் படுத்தாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல் படுத்தாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

ஜூலை ,8 ,2017 ,சனிக்கிழமை, 

சென்னை : விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,சில விஷமிகள் பொதுமக்களை தூண்டிவிடுவதால் போராட்டம் நடத்த சொல்கின்றனர். கதிராமங்கலம் பிரச்சினையை பொறுத்தவரை, அங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம். ஆனால், இப்போது சமூக விரோதிகள் பொதுமக்களை தூண்டிவிட்டு அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.இந்த விஷயத்தில் மாநில அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்கமாட்டோம்.மத்தியில் எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்தாலும், எங்களால் முடிந்த அளவுக்கு அழுத்தத்தை மத்திய அரசிடம் கொடுத்துள்ளோம். தமிழகத்தின் நலன் தொடர்ந்து காக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.