விவசாயிகள் பயன்பெரும் வகையில் வேலூரில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்

விவசாயிகள் பயன்பெரும் வகையில் வேலூரில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்

வியாழன் , ஜனவரி 07,2016,

வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேயர் ப.கார்த்தியாயினி மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை இயக்குநர் (பொருட்காட்சி) கு.தாணப்பா வரவேற்று பேசினார்.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பொருட்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசியதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அரசுப்பொருட்காட்சிகள் இந்தாண்டு நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களையும் துறையின் செயல்பாடுகளையும் பாமர பொதுமக்களும் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக இந்த அரசுப்பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இப்பொருட்காட்சியில் 27 அரசுத்துறைகளின் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் பொதுமக்கள் மட்டுமல்லாமல் குறிப்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அம்மா தேர்தல் நேரத்தில் அறிவித்த சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த சிறப்பு செயலாக்க திட்டங்கள் துறையை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழ முதலமைச்சர் பெண்களுக்கென்று இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் உருவாக்காத பெண்கள் நல வாரியத்தை தமிழகத்தில் உருவாக்கி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளார். தொலைநோக்கு பார்வை 2023 திட்டத்தை முன் நிறுத்தி அனைத்து துறைகளிலும் திட்ட கொள்கைகளை உருவாக்கி வளர்ச்சியடைந்த தமிழகமாக மாற்றிட உறுதி மொழி ஏற்று வழிநடத்தி வருகின்றார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா தேர்தலில் அளித்த 54 வாக்குறிதிகளையும் நிறைவேற்றி மக்களுக்கு சென்று சேர்ந்து கொண்டிருகின்றது. கிராமபுறங்களில் பசுமை வீடுகள், குடும்ப இல்லதரசிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர், ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், ஏழை எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கும் தங்கம், கார்பிணி தாய்மார்களுக்கு பிரசவகால நிதியுதவி, குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களுக்கும் அம்மா குழந்தை நல பெட்டகம், முதியோர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி போன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். முதலமைச்சர் அம்மா ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பள்ளி கல்லூரிகளின் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டுகளை காட்டிலும் அதிகரித்துள்ளது என்பது சிறப்பாகும். இந்தியாவில் சராசரி உயர்கல்வி தேர்ச்சி விகிதம் 17 சதவிகிதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் 43 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் ஆகும் இச்சிறப்பை தமிகம் பெற முதலமைச்சரின் சிறப்பான வழிகாட்டுதலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்டகள் ஆகும். வறுமையில் கல்வியை நிறுதிவிடாமல் மாணவர்கள் தொடர ரூ5 ஆயிரம் வைப்பு நிதி உதவித்தொகை, வியைில்லா மடிக்கணினி, பாடபுத்தகங்கள் போன்ற திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வியில் நாட்டத்தை உருவாகக்கி வளமான தமிழகம் உருவாக வழிவகைகள் செய்து வருகின்றார்கள். அண்டை மாநிலத்தவரும் வியந்து பாராட்டும் வகையில் மக்கள் போற்றும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது. இத்திட்டங்களையெல்லாம் மக்கள் கண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரசுப்பொருட்காட்சியினை அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
இவ்விழாவில் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு வங்கி வைப்பு தொகைக்கான ரூ.2 லட்சத்திற்கான ஆணையினையும், மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டரினையும், மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் காட்பாடி மற்றும் வேலூர் வட்டத்தை சார்ந்த 28 பயனாளிகளுக்கு குடும்ப புதிய அட்டையினையும், அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் முகமதுஜான், கே.ஜி.ரமேஷ், வேலூர் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க்தலைவர் த.வேலழகன், வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், கொண்டசமுத்திரம் ஊராட்சிமன்ற தலைவர் ராமு, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டபியுள்.ஜி.மோகன், துணை மேயர் சொக்கலிங்கம், நகரமன்ற தலைவர்கள் திருமதி.அமுதா சிவபிரகாசம், திரு.வேதகிரி, ஒன்றியக்குழுத்தலைவர்கள் ராகவன், ரஞ்சிதா, மண்டலகுழுத்தலைவர் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.சி.ஏழுமலை, மாமன்ற உறுப்பினர்கள் துரையரசன், பரத், சுரியாச்சாரியா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.விஜயக்குமார் நன்றியுரையாற்றினார்.