விஷவாயு தாக்கி உயிரிழந்த குடிநீர் வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விஷவாயு தாக்கி உயிரிழந்த குடிநீர் வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, டிசம்பர் 27,2015,

சென்னை : விஷவாயு தாக்கி உயிரிழந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம்,விஷப்பூச்சிகள் கடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியத்தில் பணிபுரிந்து வந்த திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கோட்டம்,திருவொற்றியூர் தெற்கு மாடவீதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன்ராமலிங்கம் என்பவர், கடந்த 22 ம்தேதியன்று மேற்கு மாடவீதியில் உள்ள கழிவுநீர் அகற்று நிலையத்தில் பணியில் இருந்த போது விஷ வாயு தாக்கியதில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 24ம்தேதிஅன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும்வருத்தமடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ராமலிங்கத்தின்குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் குடும்பதிற்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

விஷப்பூச்சிகள் கடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் நிதி உதவி;

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், தியாகராயபுரம் பகுதியைச்சேர்ந்த முகமது ஜாபர் என்பவரின் மகன் இம்ரான், கடந்த 6ம்தேதியன்று திருவொற்றியூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவிய நிலையில், விஷ பூச்சி கடித்ததால் உடல்நிலை பாதிப்படைந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 12 ம்தேதி உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த திரு. இம்ரான் குடும்பத்திற்கு எனதுஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரதுகுடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.