விஸ்வகுடி கல்லாறு நீர்த்தேக்க கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தை அடைந்தது:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு விவசாயிகள் பாராட்டு

விஸ்வகுடி கல்லாறு நீர்த்தேக்க கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தை அடைந்தது:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு விவசாயிகள் பாராட்டு

செவ்வாய், ஜனவரி 05,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், 37 கோடி ரூபாய் மதிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில், கல்லணை போல பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவரும் விஸ்வகுடி கல்லாறு நீர்த்தேக்க கட்டுமானப்பணி நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்டநாள் கனவை நிறைவேற்றிவைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

“நீரின்றி அமையாது உலகு” என்று உரைத்த வான்புகழ் கொண்ட வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, நீர் ஆதாரத்தை மேம்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கி வருகிறது. வேளாண்மையில் இரண்டாம் பசுமைப் புரட்சி ஏற்படுத்தும் நோக்கில், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட விஸ்வகுடி அருகே, கல்லாற்றின் குறுக்கே, 37 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அணை கட்டும் பணி, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. சுமார் 5 புள்ளி 5 சதுர மையல் பரப்பளவிலான இந்த நீர் தேக்கம், இரண்டாயிரம் அடி நீளத்திற்கு அமைந்துள்ளது. 36 அடி உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட்டு, இரண்டு மதகுகளும் நிறுவப்பட்டுள்ளன. கட்டுமானப்பணி முழுவீச்சில் நடைபெற்றதையடுத்து, தற்போது விஸ்வகுடி கல்லாறு அணையின் கட்டுமானப் பணி முழுமையடையும் தருவாயை எட்டியுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் வேப்பந்தட்டை, தொண்டமாந்துறை, வெங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 859 ஏக்கர் விவசாய நிலம் நேரடியாக பாசனவசதி பெறவுள்ளது. மேலும், மறைமுகமாக சுமார் 423 ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும். இதேபோல், கிணறு மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் 200 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்திற்கும் பாசன தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்துள்ள விவசாயிகள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிவைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
2001 முதல் 2006 வரை நடைபெற்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, விஸ்வகுடி கல்லாறு அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கியது. ஆனால், அதற்கு அடுத்த வந்த முந்தைய மைனாரட்டி தி.மு.க. அரசு, இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. அதன் பின்னர் 2011-ம் ஆண்டு மீண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, விஸ்வகுடி அணை கட்டுமானப்பணிக்கு 37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நீர்த்தேக்க கட்டுமானப் பணிகளை விரைபடுத்தினார்.

கல்லணை போல பிரம்மாண்டமாக விஸ்வகுடி கல்லாறு அணை காட்சியளிப்பதைக் கண்டு உற்சாகத்தில் திளைக்கும் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள், கரிகாலனைப் போல முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரும், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என பாராட்டுமழை பொழிந்தனர்.