வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு :சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு :சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

செவ்வாய், டிசம்பர் 15,2015,

கடலூர் மாவட்டம் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, வெலிங்டன் நீர்த்தேக்கப் பாசனத்திற்காக இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, வெலிங்டன் நீர்த்தேக்கப் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கடலூர் மாவட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, வெலிங்டன் நீர்த்தேக்கப் பாசனப் பகுதிகளுக்கு இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிட தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், கடலூர் மாவட்டத்தில் 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.