வெள்ளசேதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

வெள்ளசேதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

nov,23/2o15

 

                                                            சென்னை: விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்கனமழையினால் சேதமடைந்த குடிசைவீடுகளுக்கு செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. திருந்தங்கல் நகராட்சியில் கனமழையின் காரணமாக பகுதி சேதமடைந்த 12 குடிசைவீடுகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ.4100 வீதம் ரூ.49200 ம், முழுவதும் சேதமடைந்த 3 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5000ஃ- வீதம் ரூ.15000ஃ-ம் தலா 10 கிலோ அரிசியும், 1 லிட்டர் மண்ணெண்ணெய், வேஷ்டி, சேலைகளை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது :-

தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.. இதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் , வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரவாரியம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மூலம் முன்னெச்சரிக்கை பணிகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மழைகாரணமாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கி வருகிறார்.மேலும், வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என ரூ.500 கோடியினை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். இதன் படி முழுவதும் சேதமடைந்த நிரந்தர வீடு ஒன்றுக்கு ரூ.95,100-ம், முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.5000-ம், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100-ம், பசு மற்றும் எருமை மாடு உய்ரிழப்புக்கு ரூ.30000-ம், ஆடு, பன்றி உயிரிழப்பிற்கு ரூ.3000-ம், கோழி உயிரிழப்புக்கு ரூ,100-ம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.. தமிழ்நாடு முழுவதும் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் அமைச்சர் பெருமக்கள் மூலம், மாவட்ட நிர்வாகம் மூலமும் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை சேதப்பணிகளை ஒருங்கிணைக்கவும், போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும், பருவ மழையால் பாதிக்கப்படும் என கண்டறிந்த மாவட்டங்களுக்கு அமைச்சர் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் அனுப்பப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் அந்தந்த மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. எனவே மழை குறித்து பொது மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் .டி.இராதாகிருஷ்ணன், திருத்தங்கல் துணைத்தலைவர் .சக்திவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் .வி.ஆர்.கருப்பசாமி, வட்ட வழங்கல் அலுவலர் .கிருஷ்ணவேணி, வட்டாட்சியர் .சு.அய்யகுட்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.