வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்துள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களின் நகல்களை வழங்க 132 முகாம்கள், : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்துள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களின் நகல்களை வழங்க 132 முகாம்கள், : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 11,2015,

கனமழை மற்றும் வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை இழந்த பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சான்றிதழ்களின் நகல்களை வழங்குவதற்கான முகாம்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உரிய வழிமுறைகளைப் பின்பற்றி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்துள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சான்றிதழ்களின் நகல்களை வழங்கும் முகாம், வரும் 14-ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் நடைபெறவுள்ளது. உரிய வழிமுறைகளைப் பின்பற்றி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ள 132 மையங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இச்சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு ஏதுவாக கூடுதல் ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிக் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி சான்றிதழ்களை வழங்கக்கோரும் விண்ணப்படிவத்தினை அச்சிட்டு முன்னதாகவே மையங்களுக்கு விநியோகிக்கவேண்டும்;

ஒவ்வொரு சிறப்பு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் மற்றும் கணினி இயக்குபவர் நியமிக்கப்படவேண்டும்;

பொதுமக்களுக்கு படிவம் நிரப்பிக்கொடுக்கத் தேவையான உதவிகளைச் செய்ய கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்;

தேவைப்பட்ட மையங்களுக்கு ஜெனரேட்டர்வசதி செய்து தரப்படவேண்டும்;

சிறப்பு முகாம் நுழைவு வாயில் மற்றும் முகாம் நடைபெறும் இடத்தில் பேனர் அமைக்கவேண்டும்;

சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்துதரப்படவேண்டும்;

அன்றாடம் பெறப்படும் விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், இப்பணிக்கான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் முகாம்கள் நடக்கும் பள்ளிகள் விவரம் வருமாறு:–

சென்னை மேல் நிலைப்பள்ளி–எம்.ஜி.ஆர். நகர், பி.சி.கே.ஜி. மேல்நிலைப்பள்ளி– கோடம்பாக்கம், வித்யோதயா மேல்நிலைப்பள்ளி– தி.நகர், சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி– சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி– மடுவின் கரை, சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி– ஜோன்ஸ்ரோடு சைதாப்பேட்டை.அவ்வை பெண்கள் மேல் நிலைப்பள்ளி, குமார ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி– ராயப்பேட்டை.லேடி விலிங்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி– திருவல்லிக்கேணி, லேடி சிவகாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி– சென்னை–1, புனித எபாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி–மயிலாப்பூர், ஜெய கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி– சூளைமேடு.இந்து மேல்நிலைப்பள்ளி– திருவல்லிக்கேணி, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி– தண்டையார்பேட்டை, முத்தையால் பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி– புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி– ராயபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி– வில்லிவாக்கம், ஜி.எம்.டி.டி.வி. மேல்நிலைப்பள்ளி– சவுகார்பேட்டை, லூர்து மேல்நிலைப்பள்ளி– பெரம்பூர்.புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைபள்ளி– சூளைமேடு, சென்னை மேல்நிலைப் பள்ளி–எம்.எச். சாலை பெரம்பூர், யு.ஏ.ஆர். ராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி–விருகம்பாக்கம், அழகப்பா மெட்ரிக் பள்ளி–புரசைவாக்கம், பாபா மெட்ரிக் பள்ளி– கோடம்பாக்கம், பாரத வித்யாலய மெட்ரிக் பள்ளி– அயனாவரம்.கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி– சைதாப்பேட்டை, டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி–எருக்கஞ்சேரி, ஈவ் மெட்ரிக் பள்ளி–திருவல்லிக்கேணி, குட்ஹோப் மெட்ரிக் பள்ளி–அரும்பாக்கம், குருநானக் மெட்ரிக் பள்ளி– வேளச்சேரி, ஜெயகோபால் கரோடியா இந்து மெட்ரிக் பள்ளி–மேற்கு மாம்பலம், ஜெயகோபால் கரோடியா– சென்னை–82, ஜெயகோபால் கரோடியா–அண்ணாநகர், கலைமகள் வித்யாலய மெட்ரிக் பள்ளி– ராயபுரம், ருக்மணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி– கீழ்பாக்கம் உள்ளிட்ட 54 பள்ளிகளில் நடக்கிறது.