வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க தமிழக அரசு ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க தமிழக அரசு  ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு

சனி, டிசம்பர் 19,2015,

சென்னை –  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு;

அண்மையில் பெய்த மழையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 17.ம்தேதி  அன்று, நெடுஞ்சாலைகள்மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.இதில் அரசு முதன்மை செயலர், தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப்பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இரு தவிர, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களான சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்ட களப் பொறியாளர்கள் மற்றும் தரஉறுதி பொறியாளர்களுடன் ( உதவிக் கோட்டப் பொறியாளர்கள் நிலை வரை) சிறப்புஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் மற்றும்சிறுபாலங்களை உடனடியாக சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடுசெய்ததில் அதிகம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு, முறையே திருவள்ளூர் (ரூ.26கோடி), காஞ்சிபுரம் (ரூ.24 கோடி), கடலூர் (ரூ.24 கோடி) மற்றும் சென்னை (ரூ.12.75கோடி)] ரூ.86.75 கோடியும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள பிற மாவட்டங்களுக்கு ரூ.63.25கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஏற்பட்ட 109 சாலை உடைப்புகளில் 106சாலை உடைப்புகள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.

திருவள்ளூர்மாவட்டத்தில் 2 சாலை உடைப்புகளும் கடலூர் மாவட்டத்தில் 1 சாலைஉடைப்பும் வெள்ள நீர் வடிந்தபின் சீர் செய்யப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட701 சிறுபாலங்கள் சீரமைக்கப்பட்டு தடையில்லா போக்குவரத்து நடைபெறுகிறது.வெள்ள சேதத்தினால் சாலைகளில் 254 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும்ஆழமாக அறுந்தோடிய சாலை புருவங்கள் போர்க்கால அடிப்படையில் அன்றேசீரமைக்கப்பட்டன.அனைத்து சாலை மற்றும் பாலச் சீரமைப்புப் பணிகளை 31.01.2016 க்குள் முடிக்கவும்எஞ்சிய 7 இடங்களில் மாற்று தரைப் பாலங்களை பிப்ரவரி 28 ம்தேதிக்குள் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.