வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை அலுவலகக் கட்டடங்களை மறு சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை அலுவலகக் கட்டடங்களை மறு சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 25,

தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்கள், காவல்துறை அலுவலகக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஆகியவற்றை மறு சீரமைப்பது தொடர்பான தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை கட்டடங்கள் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது.

மழையினால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துறை கட்டடங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பழுதுகளை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலமாக உடனடியாக சீரமைத்திட நடவடிக்கைகளை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மை செயலாளர் திரு.கே. சண்முகம், உள்துறை முதன்மை செயலாளர் திரு. அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.அசோக் குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.டி.கே. ராஜேந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.