வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்து வாழ்த்து

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்து வாழ்த்து

வெள்ளி, ஜனவரி 22,2016,

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச் சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனி யாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வா தாரத்தை மீண்டும் பெற வகை செய்யும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் 5000 ரூபாய் வரை வட்டி யில்லா கடன் வழங்கப்படும் எனவும், கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியாக 11 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் எனவும் இந்தக் கடனை 25 வாரங் களில் வாரந்தோறும் 200 ரூபாய் என்ற அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண் டும்.

குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண் டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கப்படும் எனவும், சிறுவணிகர்களுக்கு கடன் வழங்குவதற்கென பயனா ளிகளை தேர்வு செய்ய கூட்டுறவு வங்கிகள் சிறப்பு முகாம்களை 10 நாட்கள் நடத்தும் எனவும், முதல்- அமைச்சர் ஜெயலலிதா 14.1.2016 அன்று அறிவித் தார்.

அதன்படி, பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான அம்மா சிறு வணிகக் கடன் உதவித் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய்க்கான கடனு தவி ஆணையினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்து, வெற்றிகரமாக தொழில் நடத்தி வளம் பெற வேண்டுமென்று வாழ்த் தினார்.

22.1.2016 முதல் 2.2.2016 வரை (26.1.2016-குடியரசு தினம் மற்றும் 31.1.2016- ஞாயிற்றுக்கிழமை தவிர) 10 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அந்தந்த இடத்திலேயே மனு தாரர்களிடமிருந்து விண் ணப்பங்கள் மற்றும் விவரங் கள் பெறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.