வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது:அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிழகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது:அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிழகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

ஞாயிறு, நவம்பர் 29,2015,

பிரதமர் நரேந்திர மோடி இன்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பேசும்போது,”வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளில் தமிழகஅரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக  மேற்கொண்டு வருகிறது என்று பாராட்டி பேசினார்.தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக 170 பேர் உயிரிழந்திருப்பது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த சவாலை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழகத்திற்கு உண்டு என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

                  இன்றைய உரையில் அவர் பேசியதாவது: –

பருவகால மழை நாடு முழுவதும் பெய்துள்ளது, குறிப்பாக தமிழகத்தில் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது குறிப்பாக சென்னையில் கனமழை வெள்ளத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு துரித நடவடிக்கையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பருவநிலை மாற்றத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . விவசாயிகளை காத்திட இன்னும் நாம் அதிகம் கற்பிக்க வேண்டும், அதே நேரத்தில் நமது விவசாயிகள் விஞ்ஞானிகளுக்கு குறைந்தவர்கள் அல்ல . இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும் . ஏற்படும் இன்னல்களை தவிர்க்கவும், இதற்கு உதவிடவும் சார்க் நாடுகள் முன் வரவேண்டும் என நான் ஏற்கனவே சமீபத்திய மாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளேன்.

புவி வெப்பமடைதலால் பயிர்கள் கருகி வருவது தவிர்க்கப்பட வேண்டும் . புவி வெப்பமடைதல் தவிர்க்க மாற்று எரிசக்தியே முதல் வழி . புவி வெப்பமடைதல் இன்னும் அதிகரிக்காமல் நாம் காத்திட வேண்டும், இது தொடர்பாக நான் உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமீபத்திய ஆசியான் மாநாட்டில் நான் எடுத்துரைத்தேன்.

உறுப்பு தானம் செய்யும் பழக்கம் இன்னும் அதிகரிக்க வேண்டும், இது பல உயிர்களை காக்கும், இவ்வாறு மோடி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமரிடம் சந்தேகம் கேட்க விரும்புவோர்கள், 180030007800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.