வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார்:பார்வையிட்ட பிறகு நிவாரண உதவிகள் குறித்த முடிவு அறிவிக்கப்படும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார்:பார்வையிட்ட பிறகு நிவாரண உதவிகள் குறித்த முடிவு அறிவிக்கப்படும்

வியாழன் , டிசம்பர் 03,2015,

சென்னை

விடாமல்  கொட்டிய மழையால் சென்னை நகரம் முழுவதும்  வெள்ளத்தில் மிதக்கிறது.சென்னை, காஞ்சீ புரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளை  முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை ஹெலிகாப்டர்  மூலம் பார்வையிட்டு வருகிறார்.

இதற்காக அவர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப் பட்டார். நேப்பியர் பாலம் அருகே ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ்.   அடையார் தளத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஹெலிகாப்டரில் ஏறி சென்றார். முதலில் அவர் சென்னை நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட் டார்.

அதன் பிறகு தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை வெள்ளம் பகுதிகளையும் முதல்- அமைச்சர்  ஜெயலலிதா ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து பார்த்தார். காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை தேசங்களையும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

தனி ஹெலிகாப்டர் மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு முடித்தபிறகு தேவையான நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் உதவிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட உள்ளார்.