வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,510 முகாம்கள் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை – 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை :அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,510 முகாம்கள் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை – 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை :அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

புதன், டிசம்பர் 09,2015,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,510 முகாம்கள் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர், மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் ஆணைப்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று வரை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, 5,116 மருத்துவ முகாம்களில் 8 லட்சத்து 53,412 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் – மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம் 69,518 பேரும், இந்திய முறை மருத்துவத்துறை மூலம், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 313 பேரும், பொது சுகாதாரத்துறை இயக்ககம் மூலம், 2 லட்சத்து 12 ஆயிரத்து 609 பேரும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 595 பேரும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் – ஆக மொத்தம் நேற்று வரை நடைபெற்ற 12,510 சிறப்பு வெள்ள நிவாரண மருத்துவ முகாம்கள் மூலம், 15 லட்சத்து 55 ஆயிரத்து 447 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் – 14,047 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாக இன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.