வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 590 டன் பால்பவுடர் விலையில்லாமல் விநியோகம்:பொதுமக்கள் மகிழ்ச்சி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 590 டன் பால்பவுடர் விலையில்லாமல் விநியோகம்:பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழன் , டிசம்பர் 10,2015,

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 590 டன் பால்பவுடர் விலையில்லாமல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஆவின் பால் பொருள் விநியோகம் சீராக நடைபெறுவதாக ஆவின் மேலாண் இயக்குநர் திரு. சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 590 டன் பால்பவுடர் விலையில்லாமல் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆவின் பால் தங்குதடையின்றி, நிர்ணயிக்கப்பட்ட விலையில் எவ்வித மாற்றமுமில்லாமல் அதே விலைக்கு விநியோகம் செய்யப்பட்டுவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் நுகர்வோர் சங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப எவ்வித தங்குதடையுமின்றி நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.