வெள்ளத்தால் பாதித்த பொதுமக்களுக்கு உடனே 10 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வெள்ளத்தால் பாதித்த பொதுமக்களுக்கு உடனே 10 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வியாழன் , ஜனவரி 21,2016,

மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் வீடுகளை ஒதுக்கீடு செய்து புனர்வாழ்வு அளித்த முதல்வரை பாராட்டுவதாக ஆளுநர் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை எட்டும் வகையில் சென்னை உள்பட பிற மாநகரங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 11,344 வீடுகளும், குடிசை மாற்று வாரியம் சார்பில் 45,473 வீடுகளும் அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிதியாண்டில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 12,500 வீடுகளும், பேரூராட்சி பகுதிகளில் 20 ஆயிரம் பசுமை வீடுகளும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு பின் பொதுமக்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் வீடுகளை அரசு ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக முதல்வர் எடுத்த நடவடிக்கையைப் பாராட்டுகிறேன்.
இதுபோல் முதல்வரின் இத்தகைய முயற்சிகள், வீட்டு வசதி தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாங்கக் கூடிய விலையில் வீடுகள் கிடைக்கச் செய்ததோடு, சென்னையை குடிசைப் பகுதி இல்லாத மாநகரமாக மாற்றிட வழி ஏற்படுத்தும் என நம்புவதாகவும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.