வெள்ளத்தால் பாதித்த வாகனங்களுக்கு இன்று முதல் இலவச பழுது நீக்கு முகாம்,சான்று ஆவணங்கள் ஏதும் தேவையில்லை:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளத்தால் பாதித்த வாகனங்களுக்கு இன்று முதல் இலவச பழுது நீக்கு முகாம்,சான்று ஆவணங்கள் ஏதும் தேவையில்லை:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, டிசம்பர் 12,2015,

சென்னை- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கான இலவசமாக பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்களை இன்று முதல் 21.12.15 வரை 10 நாட்களுக்கு மோட்டார் வாகன நிறுவனங்கள் நடத்துகின்றன.இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இந்த பழுது பார்க்கும் கட்டணமில்லா சேவை முகாம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்-ஆட்டோக்களை பழுதுநீக்கும் மையங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, எந்த ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டியதில்லை. வாகன உரிமைச் சான்று, ஓட்டுநர் உரிமம் என எதுவும் தேவையில்லை.

இந்த முகாம்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. இந்த முகாமில் டி.வி.எஸ்., என்பீல்ட், பஜாஜ், யமஹா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த முகவர்கள் பங்கேற்கின்றனர். எந்தெந்த கடைகளுக்குச் சென்றால் இலவசமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்கிற விவரங்கள் அரசின் இணையதளத்தில் (http:www.tn.gov.instaservicecentres2wheeler.pdf) வெளியிடப்பட்டுள்ளது.