வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ரூ.4 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ரூ.4 லட்சம் நிதியுதவி

வியாழன் , டிசம்பர் 31,2015,
நெல்லை அருகே கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள கே.வி.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விவசாயி, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, சுப்பிரமணியன் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய்க்கான காசோலை அவரது மகன் முருகேசனிடம் வழங்கப்பட்டது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுப்பிரமணியனின் குடும்பத்தினர் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.