வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:

வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:

வியாழன் , டிசம்பர் 03,2015,

 

சென்னை – சென்னை நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட்டனர்.. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக விடிய விடிய மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. எங்கும் மழைநீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் சென்னை மாநகராட்சி மோட்டார் யந்திரங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எங்கெங்கு மழை நீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

சென்னையில் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.மழை நீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கைகளை எடுத்தனர். அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துமாரியம்மன் நகர் அருகில் உள்ள கூவம் நதி, கோயம்பேடு-–விருகம்பாக்கம் கால்வாய், பெரியார்பாதை-–அழகிரிநகர் சந்திப்பு, நெல்சன் மாணிக்கம் ரோடு ஆகிய பகுதிகளுக்கு அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா சென்று ஆய்வு செய்தார். தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

கவுன்சிலர்கள் ஏ.இ.வெங்கடேசன் எம்.சி., மலைராஜஎஸ்.அமீர்பாஷா சென்னை மாநகராட்சி அதிகாரிகள் . உசேன், இனியன், குடிநீர் வாரிய அதிகாரிகள் இராமலிங்கம், ஏ.இ.நாகலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் சென்றார்கள். ஆயிரம்விளக்கு பகுதியில் 117–வது வார்டு விஜயராகவா சாலையில் வெள்ள நிவாரண பணிகளை அமைச்சர் பா.வளர்மதி பார்வையிட்டார். தேங்கிய தண்ணீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உடன் 117–வது வார்டு கவுன்சிலர் பி. ஆறுமுகம் என்கிற சின்னையன், பகுதி செயலாளர் நுங்கை மாறன், வட்ட துணை செயலாளர் பி.இளையமாறன், ஆகியோர் உள்ளனர்.