வெள்ளம் பாதித்த பகுதியில் மாணவ–மாணவிகளுக்கு தடுப்பூசி:தொற்று நோயை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை

வெள்ளம் பாதித்த பகுதியில் மாணவ–மாணவிகளுக்கு தடுப்பூசி:தொற்று நோயை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை

சனி, டிசம்பர் 19,2015,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழை கொட்டித் தீர்த்தது. மழை பாதிப்புகளால் தொற்று நோய் பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான களக்காட்டுர், விப்பேடு, ஐயங்கார்குளம், சதாவரம் மற்றும் சிறுகாவேரிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இதேபோல் காஞ்சிபுரம் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி சுகாதார துறையின் சார்பில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர், அருள் மொழி தலைமையிலான மருத்துவக் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். அரசு மாணவ, மாணவியர்கள் தங்கியுள்ள விடுதிகளிலும் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோருக்கும் டிடி ஊசிகள் போடப்பட்டது.