வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வங்கிக்கடனை தள்ளிவைக்க அருண்ஜெட்லியிடம் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வங்கிக்கடனை தள்ளிவைக்க அருண்ஜெட்லியிடம் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

திங்கள் , டிசம்பர் 21,2015,

சென்னை : வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வங்கிக்கடன் வசூலை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக நிதியமைச்சர் ஒபன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ள பாதிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியபின், வங்கக் கடலில் உருவான,குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும்,மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில், கன மழை பெய்தது. இது, கடந்த 100 ஆண்டுகளில்பெய்திராத மழையாகும். குறிப்பாக, தமிழகத்தில் நான்கு கட்டங்களில், இத்தகைய கன மழைபெய்தது. 8.11.2015, மற்றும் 10.11.2015, ஆகிய நாட்களில் மட்டும், கடலூர் மாவட்டத்தில் 26.6செ.மீ. மழை பெய்ததால், கடலூர் மாவட்டம், மழையால் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளானது.கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில், 38 செ.மீ. அளவுக்கு பெருமழை பெய்தது. மேலும்,காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13.11.2015 அன்று 32.6 செ.மீ. மழை பெய்தது. மேலும், 15.11.2015,மற்றும் 16.11.2015, ஆகிய நாட்களில், கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள், பெரிதும் பாதிப்புக்குள்ளாயின.

இந்த மழையின் பாதிப்பிலிருந்து மீண்டு, மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்த நிலையில், 1.12.2015 அன்று, மீண்டும் பெய்த பெரும் மழையின் காரணமாக,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள், பெரும் பாதிப்பை சந்திக்கநேர்ந்தது. குறிப்பாக, தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில், அதிகப்படியாக 49.4 செ.மீ. மழைபெய்தது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெள்ளம்ஏற்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இத்தகைய கன மழையின் காரணமாக, அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான,கடலூர், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி, மீட்பு, நிவாரணம், மற்றும் சீரமைப்புப்பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர் பெருமக்கள், மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக்கொண்ட குழுக்களாகவும், சென்னை மாநகரில், ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம், 15 மண்டலங்களிலும் 15 ஐஏஎஸ் அதிகாரிகளும், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை, சென்னை மாநகராட்சி ஆணையருடன் இணைந்து, போர்க்கால அடிப்படையில்மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

வரலாறு காணாத வகையில் பெருமழை பொழிந்ததன் காரணமாக, பெருவெள்ளம்ஏற்பட்டதால், மக்களை மீட்பதற்கு ராணுவம், கப்பற்படை, மற்றும் விமானப் படை, தேசியப்பேரிடர் மீட்புக் குழு, கடலோரக் காவல் படை, ஆகியவற்றின் உதவி, உரிய நேரத்தில் கோரிப்பெறப்பட்டது. 1,200 ராணுவ வீரர்கள், 600 கப்பற்படை மற்றும் விமானப் படை வீரர்கள், 1920தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையினர், 30,000 காவல் துறையினர், 1,400 தீயணைப்பு மற்றும்மீட்புப் பணிகள் துறையினர், 45,000 இதர துறையினர் என, மொத்தம் 80,120 பேர், மீட்பு மற்றும்நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா எடுத்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், மத்திய, மாநில அரசுகளின் துறைகளைச் சார்ந்தபல்வேறு அமைப்புகளும், ஒருங்கிணைந்து செயல்பட்டு சீரிய முறையில் மீட்புப்பணியாற்றியதன் விளைவாகவும், இந்தப் பெருவெள்ளத்திலிருந்து, மனித இழப்புகளைபெருமளவு தடுக்க முடிந்தது. எனினும், வீடுகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளுக்குஏற்பட்ட சேதத்தை, தடுக்க இயலவில்லை. இந்தப் பேரிடரினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்துபொதுமக்களை மீட்கும் பொருட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு,சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஐஏஎஸ் உயர் அதிகாரிகள்,முப்படைகளைச் சார்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மற்றும் உள்நாட்டுமீனவர்கள் ஆகியோர், ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டு, அதை அவ்வப்போது ஆய்வு செய்து, அரசு திறம்பட செயல்பட்டதன்விளைவாக, வெள்ள பாதிப்படைந்த பகுதிகளில், இயல்பு வாழ்க்கை வெகுவிரைவில்திரும்பியுள்ளது. இதற்குக் காரணம்முதல்வர் ஜெயலலிதாபோர்க்கால நடவடிக்கைகளும், சிறப்பான ஒருங்கிணைப்புமே ஆகும்.

வெள்ளச் சேதம்,8481 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு, இது குறித்து, மத்திய அரசுக்கு கடந்த நவம்பர் 23-ஆம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டு, நிவாரண உதவியாக, மத்திய அரசிடம்2000 கோடி ரூபாய், முதற்கட்டமாக கோரப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கு மூலம் நிவாரண உதவி

முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று, பிரதமர் மோடி வெள்ள சேதத்தை ஆய்வு செய்து, 1000 கோடி ரூபாய், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்துவிடுவித்தார். அதற்கு முதல்வர் ஜெயலலிதாசார்பாக, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தின் அளவு, மீண்டும்கணக்கிடப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் முதலமைச்சர் ஜெயலலிதாவெள்ளச் சேதம் குறித்த கூடுதல் அறிக்கையை, மத்திய அரசுக்கு அளிக்கஉள்ளார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, பல்வேறு நிவாரணப்பணிகளை மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டு, அப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மழை வெள்ளம் சூழ்ந்ததால்பாதிப்புக்கு உள்ளான, 19.63 லட்சம் மக்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 7150 நிவாரணமுகாம்களில், தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டநபர்களுக்கு, உணவு, குடிநீர், மற்றும் மருத்துவ வசதிகள், அளிக்கப்பட்டன. உயிர் இழந்தோர்,வீடுகளை இழந்தோர், வீடுகள் பாதிக்கப்பட்டோர், கால்நடை இழப்பு போன்றவைகணக்கிடப்பட்டு, நிவாரண உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணத் தொகையை,வங்கி கணக்குகள் மூலமே வழங்கவேண்டும் என்று, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்தகைய உடனடி நிவாரணப் பணிகளோடு, அடையாறு, கூவம் போன்ற ஆற்றோரங்களில் குடியிருந்து, வெள்ளத்தால்வீடுகளை இழந்த மக்களுக்கு, பத்தாயிரம் புதிய வீடுகளை உடனடியாக வழங்க,முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதற்கான பணிகள், முழுவீச்சில்நடைபெற்று வருகின்றன. அதேபோல், கிராமப்புறங்களிலும் குடிசைகளை இழந்தகுடும்பங்களுக்கு, வீடுகளைக் கட்டித்தர, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கஅறிவுறுத்தி உள்ளார்கள். பயிர் சேதங்களுக்கான நிவாரணம் போன்ற நிவாரண உதவிகளை,விரைவாக வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

வங்கிக்கடனை தள்ளி வையுங்கள்

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்பஅட்டை, அடையாள அட்டை, பத்திரங்கள் போன்றவற்றின் பிரதிகளை வழங்க, முகாம்கள்நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வங்கிகளும் கலந்து கொண்டு, சேமிப்புக் கணக்குப்புத்தகங்களை வழங்கி வருகின்றன. இதற்கான அறிவுரைகளை வழங்கிய மத்தியநிதியமைச்சகத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா சார்பாக, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு எரிவாயு உருளைகள், உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.இந்தப் பெருவெள்ளத்தினால், சிறு, குறு தொழில்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின.அவர்களுக்கு புதியதாக கடன் வழங்க, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சியை, நான் மனதார பாராட்டுகிறேன்.

வங்கிகள் நடத்தும் இந்த சிறப்பு முகாம் மூலம், புதிய கடன்கள்வழங்கும் இந்த நடவடிக்கையால், பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் குடும்பங்கள், பெரும்பயன் பெற்று, இந்தப் பேரழிவிலிருந்து அவர்கள் மீண்டுவர, ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்என கருதுகிறேன்.  பயிர்கடன், விவசாயக்கடன், சிறு குறு தொழில் கடன் போன்ற கடன்களைதிரும்பச் செலுத்த, காலஅவகாசத்தை நீட்டித்தும், புதிய கடன் வழங்கவும், வங்கிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டபடி, வீட்டுக்கடன், வாகனக் கடன், கல்விக் கடன் போன்ற, பிற கடன்வசூலையும் ஒத்திவைக்க வேண்டும் என்றும், வெள்ளம் பாதித்த மக்களுக்கு,தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்பதனப் பெட்டி, சலவை இயந்திரம் போன்ற வீட்டு உபயோகப்பொருட்களை வாங்க ஏதுவாக, ஐந்து லட்சம் ரூபாய் வரை, சலுகைக் கடன் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்

நூறு ஆண்டுகள் காணாத மழையால், தமிழ்நாட்டில் இந்த வெள்ள பாதிப்புஏற்பட்டிருந்தாலும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தப் பேரழிவை திறம்படக் கையாண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அனைத்துஉதவிகளையும் செய்து வருகிறார்கள். மக்கள் விரைவில் பாதிப்பிலிருந்து மீண்டுவர,அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர்கள் உறுதியளித்துள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.