வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி திரிபுரா முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி திரிபுரா முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

வெள்ளி, டிசம்பர் 25,

சென்னை : தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்க, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா, திரிபுரா முதலமைச்சர் . மாணிக் சர்க்காருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்காருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களின் மறுவாழ்வுப் பணிகள் விரைவில் நிறைவடைய தமது அரசு, பெருமுயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, திரிபுரா முதலமைச்சர் தமிழக மக்களின்பால் கொண்டுள்ள அக்கறை மற்றும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.