வெள்ள பாதிப்புகளுக்கு நிதிகளை அளிக்க விரும்புவோர், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கலாம்;வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பப்படும் தொகைக்கு 100 சதவீத வருமான வரிவிலக்கு என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ள பாதிப்புகளுக்கு நிதிகளை அளிக்க விரும்புவோர், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கலாம்;வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பப்படும் தொகைக்கு 100 சதவீத வருமான வரிவிலக்கு என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், டிசம்பர் 08,2015,

வெள்ள பாதிப்புகளுக்கு நிதிகளை அளிக்க விரும்புவோர், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இந்த நிவாரணத்துக்கு அனுப்பப்படும் தொகைக்கு 100 சதவீத வருமான வரிவிலக்கு உண்டு.என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு, குடிநீர் என நிவாரணங்கள் வழங்கி வருகிறது. இந்திய கப்பற்படையினைச் சேர்ந்த 3 கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளன. அவை அனைத்தும் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல தொண்டு நிறுவனங்களும், தனியார் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி உள்ளனர்.

பல தன்னார்வ அமைப்புகள் நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள மையத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்வதற்காக பல தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் வெள்ள நிவாரணத்துக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நிதி உதவி செய்ய விரும்புவோர், Chief Ministers Public Relief Fund என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை (டி.டி.,) எடுத்து, நிதித் துறை இணைச் செயலருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
எந்த முகவரிக்கு அனுப்புவது?: காசோலைகள் அல்லது வரைவோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி: The Joint Secretary and Treasurer, Chief Ministers Public Relief Fund, Finance (CMPRF) Department, Government of Tamilnadu, Secretariat, Chennai – 600 009. இ-மெயில்: jscmprf@tn.gov.in
வங்கியிலும் செலுத்தலாம்: மின்னணு வங்கிச் சேவையை பயன்படுத்தியும், சேமிப்புக் கணக்கில் நிதி உதவிகளை நேரடியாக வழங்கிடலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலக வங்கிக் கிளை, சென்னை-600 009. வங்கிக் கணக்கு எண்: 11720 10000 00070. ஐ.எப்.எஸ். எண்: IOBA0001172. பான் எண்: AAAGC0038F. அனைத்து நிதிக்கும், நூறு சதவீதம் வருமான வரி விலக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது