வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட விருது – முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட விருது – முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, இதர திட்டங்களுடன் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தேசிய விருதினை பெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் திரு.கா. பாஸ்கரன் ஆகியோரும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டத்திற்கான தேசிய விருதினை பெற்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. வீர ராகவ ராவ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எஸ். கணேஷ் ஆகியோரும் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் இன்று, புதுடெல்லியில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நாள் மாநாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, இதர திட்டங்களுடன் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தேசிய விருதினை பெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் திரு.கா. பாஸ்கரன் ஆகியோரும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டத்திற்கான தேசிய விருதினை பெற்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. வீர ராகவ ராவ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எஸ். கணேஷ் ஆகியோரும் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின்போது, நகராட்சி, நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி உடனிருந்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் தலைமைச் செயலகத்தில் இன்று, புதுடெல்லியில் நடைபெற்ற NDTV தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில், வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அந்நிறுவனம் வழங்கிய “நாட்டிற்காக தலைசிறந்த சேவை புரிந்தமைக்கான விருதினை” ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, தொழிலாளர் ஆணையர் திருமதி பெ.அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இரா. கஜலெட்சுமி, ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.