வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு மத்திய குழு பாராட்டு

வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு மத்திய குழு பாராட்டு

செவ்வாய், ஜனவரி 05,2016,

தமிழக வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான குழுவினர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது மாநில அரசின் அனைத்து துறைகளும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டதுடன், சுகாதாரப் பணிகள், நோய் தடுப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சீரமைப்பு பணிகளை உரிய நேரத்தில் செய்ததற்காக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்ததாக டி.வி.எஸ்.என்.பிரசாத் கூறினார்.

பெருமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பதை தமிழக அரசு முழுவீச்சில் தொடங்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு மத்திய குழு தனது பரிந்துரைகளை விரைவில் அளித்து மத்திய அரசு தேவையான நிதி உதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதற்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.