வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

November 16, 2015

சென்னை: சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை நிவாரணப்பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஜெயலலிதா புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெருமழை பொழிந்து வருகிறது. முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி நான் உத்தரவு பிறப்பித்திருந்தேன். அதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம், சீரமைப்புப் பணிகள் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பணிகள்  நடைபெற்று வருகின்றன.

மேற்காணும் பணிகளை ஒருங்கிணைக்கவும், போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும் பருவமழையால் பாதிக்கப்படும்மென கண்டறிந்த மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் 16 மூத்த இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் அனுப்பப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரியளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உதவி புரிவதற்கும் பணிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் கீழ்காணும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அனுப்ப நான் ஆணை பிறப்பித்துள்ளேன்.  சா விஜயராஜ் குமார்,., மருத்துவர் க மணிவாசன், முனைவர் தா கார்த்திகேயன்,  வெ சந்திரசேகரன்,  முனைவர் இரா பழனிசாமி, தி ந வெங்கடேஷ்,  மருத்துவர் பு உமாநாத் சி காமராஜ், இஆப., மருத்துவர் சீ ஸ்வர்ணா,  காகர்லா உஷா,  இராஜேந்திர ரத்னூ,  இல நிர்மல்ராஜ்,  இரா கிர்லோஷ் குமார்,  ஆ கார்த்திக் ,  க லதா,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம், முடிச்சூர், பல்லாவரம், வரதராஜபுரம் போன்ற இடங்கள் நேற்று பெய்த அதிக மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைக்கவும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் கீழ்க்காணும் அதிகாரிகளை அனுப்பவும் ஆணை பிறப்பித்துள்ளேன். ராஜேஷ் லக்கானி  முனைவர் ச விஜயகுமார், பெ அமுதா,  மு பாலாஜி,  சி அ ராமன்,  த ஆனந்த்,  மருத்துவர் இரா ஆனந்தகுமார்,  ப மகேஸ்வரி,., ப கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.