வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தால் பயனடைந்து வரும் ஏழை எளிய மக்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தால் பயனடைந்து வரும் ஏழை எளிய மக்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

புதன், டிசம்பர் 23,2015,

முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா உணவகங்கள் மூலம், நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் பசியாறி வருகின்றனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தால் பயனடைந்து வரும் ஏழை எளிய மக்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை-எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவினை வயிறார உண்ணும் வகையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜுன் மாதம் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் மூலம் சுத்தமான குடிநீர் மற்றும் தரமான உணவுகள் சுகாதாரமான முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த உணவகங்களில் குழந்தைகளுடன் குடும்பத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் உட்பட பலர் ஆர்வமுடன் உணவருந்தி செல்கின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்த மேயர் திருமதி.கார்த்தியாயினி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு இத்திட்டத்தை தங்கள் பகுதிகளில் செயல்படுத்த ஆர்வம்காட்டி வருவதாகத் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினருக்கும் உணவளித்து அட்சய பாத்திரமாக விளங்கி வரும் அம்மா உணவகம் மூலம் வயிறார உணவருந்தி வரும் மக்கள் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.