வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பு:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பு:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், ஜனவரி 05,2016,

வேலூர் மாநகராட்சி பகுதியில் 40 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டு, ஒரு லட்சம் பேர் பயனடைந்துள்ளதால், முதலமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, வேலூர் மாநகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 40 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டம் இரண்டு பகுதிகளாக செயல்பட்டுள்ளது.

பகுதி ஒன்றில், 4 பிரிவுகளில் ஆயிரத்து 197 ஆள்நுழைவு வாயில் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 28 கிலோமீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 2-ம் பிரிவில் 888 ஆள்நுழைவு வாயில் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

3-ம் பிரிவில், நாளொன்றுக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைத்து கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 4-ம் பிரிவில் கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து வேலவாடி ஏரி வரை, பைப்லைன் அமைக்கும் பணியில் சுமார் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது 143 புதைவடிகால் இணைப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வீட்டு இணைப்புகள் வழங்கும் பணிதொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வீடுகளில் இணைப்புகள் பெற்றுக் கொள்ள அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் பயனடைந்துள்ள 14 வார்டுகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.