வேலூர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு

வேலூர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு

வெள்ளி, ஜனவரி 01,2016,

வேலூர் மாவட்ட மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கும் வகையில், ஆயிரத்து 295 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாநகராட்சி கூட்டத்தில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சி மன்றக் கூட்டம், மேயர் திருமதி கார்த்தியாயிணி தலைமையில் நடைபெற்றது. இதில், மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர், வேலூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி ஆண்டு முழுவதும் வழங்கும் வகையில் ஆயிரத்து 295 கோடி ரூபாய் செலவில், வேலூர் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். பின்னர், கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்படவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளை உள்ளடக்கிய பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.