வேலூர் மாவட்டத்தில் 1,29,000 அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் :முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் நன்றி

வேலூர் மாவட்டத்தில் 1,29,000 அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் :முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் நன்றி

புதன்கிழமை, ஜனவரி 27,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 36 அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் நலத்திட்ட உதவிகளை குக்கிராமங்களைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் சிரமமின்றி பெறுவதற்கு வசதியாக இன்றும் நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள தொழிலாளர்களும் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெறுவதற்கு வசதியாக, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் அனைத்து தரப்பினரையும் உறுப்பினராக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கே சென்று நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்க்கும் பணி, அனைத்து மாவட்டங்களிலும் துரிதப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் வாரியங்களில் அனைத்துபிரிவு தொழிலாளர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் கடந்த 2011ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக சேர்க்கப்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 36 தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 25 கோடியே 10 லட்சத்து ஆயிரத்து 150 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விளிம்பு நிலையில் உள்ள தங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தாயுள்ளத்துடன் பல்வேறு நலத்திட்ட உதவிளை வழங்கி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேபோல், குக்கிராமங்களில் உள்ள அனைத்துவகை தொழிலாளர்களும், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் வகையில், குடியாத்தத்தில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் அரக்கோணத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள அப்பகுதி தொழிலாளர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிப்பதற்கு வசதியாக கல்வி உதவித்தொகை மற்றும் மகப்பேறு உதவி, முதியோர் ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது என வேலூர் மாவட்ட தொழிலாளர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.