வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் ; முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் ; முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், நவம்பர்,24-2015

சென்னை,

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை, வேளச்சேரி வட்டம், அஷ்டலட்சுமி நகர், 5–வது தெருவில், மேல்நிலை மின்கம்பி மழை மற்றும் காற்றினால் திடீரென அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகர், 6–வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா 4 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.