விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானி சாகர் அணையிருந்து நாளை தண்ணீர் திறப்பு:1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானி சாகர் அணையிருந்து நாளை தண்ணீர் திறப்பு:1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், ஜனவரி 12,2016,

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானி சாகர் அணையிலிருந்து 2-ம் பருவ புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் பருவ புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்குக் கோரிக்கைகள் வந்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் பருவ புன்செய் பாசனத்திற்கு நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதனால், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.