வைகையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி கடலில் நீர் வீணாகமல் சேமிக்க, உதவிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சாந்த நன்றி

வைகையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி  கடலில் நீர் வீணாகமல்  சேமிக்க, உதவிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சாந்த நன்றி

சனி, மார்ச் 12,2016,

ராமநாதபுரம் மாவட்டம் வைகையாற்றின் குறுக்கே 78 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க, உதவிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ராமநாதபுரம் மக்கள் நெஞ்சாந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க முதலமைச்சர் செல்விஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக வைகை ஆற்றின் குறுக்கே, கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லூர், குணப்பனேந்தர், கே.வலசை ஆகிய 4 இடங்களில் தடுப்பணைக்கட்ட 78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். பணிகள் முடிக்கப்பட்டு, தடுப்பணைகளை, முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். கடலில் வீணாக, கலக்கும் நீரை சேமித்து, விவசாயத்திற்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கவும், குடிநீர் பஞ்சம் தீரவும், தடுப்பணைகளை கட்டி, சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விளாத்திக்குளம், கழுகுமலை, புதூர் ஆகிய இடங்களில் தலா ஆயிரம் மெட்ரிக் டன் விவசாய பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்குகள் குளிர்சாதன வசதியுடன் ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. விவசாயிகள் விளைவித்த பயறு,தானிய வகைகளை, கிடங்கில் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.