ஸ்ரீரங்கம் கட்டிட விபத்து: பலியான 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படிதலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது

ஸ்ரீரங்கம் கட்டிட விபத்து: பலியான 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படிதலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது

சனி, டிசம்பர் 26,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், கட்டட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தலா ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகள் நேரில் வழங்கப்பட்டன.

ஸ்ரீரங்கத்தில் உள்ள மேலஉத்தரவீதியில், கட்டுமானப் பணி நடைபெற்றபோது, ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர் திரு. டி.பி. பூனாட்சி, அரசு தலைமைக்கொறடா திரு. ஆர். மனோகரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேற்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து தலா ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டன. மேலும் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.