அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியாக மயிலாடுதுறை தொகுதி அமைய வேண்டும் : அமைச்சர் ஜெயபால் பேச்சு

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியாக மயிலாடுதுறை தொகுதி அமைய வேண்டும் : அமைச்சர் ஜெயபால் பேச்சு

வியாழன் , மார்ச் 24,2016,

மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர் ஜெயபால் கூறினார்.

மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியகுழுத்தலைவருமான சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லையன், மாவட்ட இணைச்செயலாளர் மீனா, மாவட்ட துணைசெயலாளர் விஜயபாலன், தொகுதி செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயபால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த பாராளுமன்ற தேர்தலில் சதவீத அடிப்படையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதே போல வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியாக மயிலாடுதுறை தொகுதி அமைய வேண்டும். அதற்கான களப்பணியை நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் அந்தந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ தங்கமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆத்து£ர் செல்வராஜ், தொகுதி இணைச் செயலாளர் சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் நந்தா விஜயகுமார், ஒன்றிய நிர்வாகிகள் சுந்தர்ராஜன், கவிதா கணேஷ்குமார், பங்கஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

இதைபோல மயிலாடுதுறை நகர அ.தி.மு.க செயல்வீரர் கூட்டம் நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்றது. நகர நிர்வாகிகள் உமாசந்திரன், புவனேஷ்வரிசரவணன், செந்தில்குமார், சி.எஸ்.சரவணன், விஜயாள் பாபுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச்செயலாளர் நாஞ்சில் கார்த்திக் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அமைச்சர் ஜெயபால் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மணவை மாறன், முன்னாள் நகரசெயலாளர்கள் அலி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.