அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன : ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகிறார்

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன : ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகிறார்

ஆகஸ்ட் 21 , 2017 , திங்கட்கிழமை,

சென்னை : கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று தங்களை இணைத்துக் கொண்டன. தொண்டர்கள் எதிர்பார்த்தது இனிதாக நடந்தது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதற்கான விழா கோலாகலமாக நடந்தது.அணிகள் இணைப்பால் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

இன்று காலை முதலே அதிமுக தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் ஆகியன பரபரப்பாக இருந்துவந்த நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டனர்.பின்னர் அணிகள் இணைப்பை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், இன்று மாலை புதிய அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது. அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது