அம்மா குடிநீர் திட்டத்தில் ஏழைகளுக்கு நாள்தோறும் 20 லிட்டர் இலவச ’மினரல்’ குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

அம்மா குடிநீர் திட்டத்தில் ஏழைகளுக்கு நாள்தோறும் 20 லிட்டர் இலவச ’மினரல்’ குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனி, பெப்ரவரி 13,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை-எளிய மக்களும், மினரல் வாட்டர் என சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற ஏதுவாக, “அம்மா குடிநீர் திட்டத்தை” அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் 100 இடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு, எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் விலை ஏதுமின்றி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், குடிநீர் சுத்திகரிப்பு தானியங்கி நிலையத்தில் இருந்து எளிதில் குடிநீர் பெறும் வகையில், Smart Card வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்கும் திட்டம், தனி மின் விசைத் திட்டம் என எண்ணற்ற குடிநீர்த் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 56 மாதங்களில்  41 கூட்டு குடிநீர்த் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர் திட்டங்கள், 7,324 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.  மேலும், 6,602 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பி லான 69 திட்டப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.  இதன் காரணமாக அனைத் துக் குடியிருப்புகளும்  பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள 69 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 30 பேரூராட்சிகள் ஆகியவற்றில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் அமைத்து குடிநீர் வழங் கிட நான் ஏற்கெனவே உத்தரவிட்டதன் அடிப்படை யில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை நகரில் வசதி படைத்தோர், ‘மினரல் வாட்டர்’ என்று பொதுவாக சொல்லப்படும் எதிர்மறை சவ்வூடு பரவுதல், அதாவது ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை  வாங்கி பயன்படுத்து கின்றனர்.  இந்த குடிநீரை தாங்களும் வாங்கிப் பருக வேண்டும் என்பது ஏழை எளிய மக்களின் விருப்பமாகும்.  இதனை நிறைவேற்றும் வகையில், ‘அம்மா குடிநீர் திட்டம்’ என்ற ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன்படி, முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 100 தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும்.  இவை ஒவ்வொன்றும் மணிக்கு  2,000 லிட்டர் நீர் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாக இருக் கும்.

தேவைக்கேற்ப இதன் செயல்திறன் அதிகரிக் கப்படும்.  இந்த சுத்திகரிக் கப்பட்ட குடிநீர், ஆய்வகங் கள் மூலம் பரிசோதிக்கப் பட்டு அதன் தரம் உறுதி செய்யப்படும்.  பொது மக்களுக்கு விலை ஏதுமின்றி இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடும்பம் ஒன்றுக்கு நாளன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் ஏழை எளிய மக்கள் குடிநீர் சுத்திகரிப்பு தானியங்கி நிலையத்திலிருந்து எளிதில் குடிநீர் பெறும் வகையில் ஸ்மார்ட்கார்டு வழங்கப் படும். எனது அரசின் இந்த நடவடிக்கை, ஏழை எளிய மக்களும் மினரல் வாட்டர் என சொல்லப்படும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் பெற வழிவகுக்கும். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.