அம்மா சிறு வணிகக் வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி

அம்மா சிறு வணிகக் வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி

வியாழன் , பெப்ரவரி 04,2016,

மழை-வெள்ளம் பாதித்தோருக்கான அம்மா சிறு வணிகக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த சிறுவியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.5 ஆயிரம் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடக்கி வைத்தார்.

இதுவரை எவ்வளவு? இதுவரை 5,186 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதில் 3,17,035 விண்ணப்பங்கள் பாதிக்கப்பட்ட விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 54,653 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ரூ.27.32 கோடி கடனாக அளிக்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று நாள்களில் கள ஆய்வு? இந்தத் திட்டத்தை பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, விண்ணப்பங்கள் குறித்து கள ஆய்வு செய்ய கூட்டுறவுத் துறை சார்பில் தலா 3 அலுவலர்கள் கொண்ட 101 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் 3 நாள்களில் கள ஆய்வு நடத்தி, உண்மையிலேயே கடை நடத்துகிறார்களா, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியா என்பது விவரங்களை உறுதிப்படுத்துகின்றனர்.

விவரங்கள் உறுதி செய்யப்பட்டவுடன் கடன் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.