அம்மா திட்ட சிறப்பு முகாம்: மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனே சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் ஏராளமானோர் பயன்

அம்மா திட்ட சிறப்பு முகாம்: மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனே சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் ஏராளமானோர் பயன்

சனி, நவம்பர் 26,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைத் திட்டங்களில் மகத்தான திட்டமான அம்மா திட்ட சிறப்பு முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. இதில், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்தல் போன்ற மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்ப்பட்டன.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், “மக்களைத் தேடி அரசு” என்ற உன்னத நோக்கத்தின்கீழ், தமிழகம் முழுவதும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடிநீர் பிரச்சனை, நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட 16 வகையான கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  சென்னையில் அமைந்தகரை, அயனாவரம், வேளச்சேரி, புரசைவாக்கம், கிண்டி ஆகிய 5 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள்  நேற்று நடைபெற்றன.

சென்னை கிண்டி வட்டத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில், அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் மனு அளித்தனர். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உடனே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சென்னை வேளச்சேரி வட்டம், ஆதம்பாக்கம், பிருந்தாவன நகர் பிரதான சாலை பகுதியில் நடைபெற்றஅம்மா திட்ட சிறப்பு முகாமில் ஏராளமானோர் மனுக்களை அளித்துசான்றிதழ்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர்.

சென்னை மாம்பலம் வட்டத்திற்குட்பட்ட விருகம்பாக்கத்தில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமில், பயனாளிகளுக்கு உடனுக்குடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சென்னை மைலாப்பூர் வட்டத்திற்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமில், ஏராளமானோர் மனுக்களை அளித்துசான்றிதழ்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர்.  இதேபோன்று, சென்னை எழும்பூர் வட்டத்திற்குட்பட்ட நுங்கம்பாக்கத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் மனு அளித்தனர். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உடனே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலையாங்குளம் பகுதியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் ஏராளமானோர் மனுக்களை அளித்துசான்றிதழ்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர்.

தங்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் உடனே வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.