அரசு திட்டங்ககளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தொடங்கிய பொருட்காட்சி – திருவண்ணாமலையில் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

அரசு திட்டங்ககளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தொடங்கிய பொருட்காட்சி – திருவண்ணாமலையில் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

சனி, டிசம்பர் 26,2015,

அரசு திட்டங்ககளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரசு பொருட்காட்சி திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அரசுத் துறைகளின் அரங்குகள் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த கடந்த 2 ஆண்டுகளாக அரசுப்பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறையும் இக்கண்காட்சிககு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசின் நலத்திட்ட உதவிகள், நகர்புற வளர்ச்சி, தொழில்வளம், அறிவியல் வேளாண்மை உள்ளிட்ட 27 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி, திரு. முக்கூர் என். சுப்ரமணியன் ஆகியோர் நேற்று பொருட்காட்சியைத் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர். இந்த விழாவின்போது, 62 பயனாளிகளுக்கு ரூபாய் 9 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஞானசேகரன், பல்துறை அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.