அரியலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது

அரியலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது

வெள்ளி, செப்டம்பர் 02,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அரியலூரில் 40க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், ஆதரவற்ற மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள், மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்துவரும் 42 குழந்தைகளுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகையாக மாதம் 2 ஆயிரம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. தங்களின் கல்வி மேம்பாட்டிற்காக தாயுள்ளத்துடன் உதவித்தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, ஆதரவற்ற குழந்தைகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.