அழகிரி பிறந்தநாளையொட்டி, 8 மணி நேரம் காக்க வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்காமல் ஏமாற்றிய துரைதயாநிதிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

அழகிரி பிறந்தநாளையொட்டி, 8 மணி நேரம் காக்க வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்காமல் ஏமாற்றிய துரைதயாநிதிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் பிறந்தநாளையொட்டி, அவரது மகன் துரைதயாநிதி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்காமல் பொதுமக்களை பல மணி நேரம் அழைக்களித்து, ஏமாற்றிய சம்பவம் தேனி மாவட்ட மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயதான மூதாட்டிகள் உள்ளிட்ட பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்ததால், ஆத்திரமடைந்த போடிநாயக்கனூர் மக்கள், அழகிரி மற்றும் அவரது மகனின் அநாகரீக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரைதயாநிதி, அழகிரியின் பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டம் போடியநாயக்கனூர் அருகேவுள்ள தர்மத்துப்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை காட்டி, பெண்கள், வயதான மூதாட்டிகள் உட்பட ஏராளமானோர் அழைத்துவரப்பட்டு, நிகழ்ச்சி அரங்கில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை அமர வைக்கப்பட்டிருந்தனர். 8 மணிநேர தாமதத்திற்கு பிறகு அங்கு வந்த துரைதயாநிதி, ஒரு சிலருக்கு மட்டும் அரிசி பைகளை வழங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால், மூதாட்டிகள் மற்றும் பெண்கள், ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே, குறைந்த எண்ணிக்கையிலான அரிசி பைகள் ஒருசிலருக்கு விநியோகிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் மூதாட்டிகள் மயங்கி விழுந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்களும் காயமடைந்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசைகாட்டி அழைத்துவந்து, வயதான மூதாட்டிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றிய அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் தி.மு.க.வினருக்கு தேனி மாவட்ட பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.