அ.இ.அ.தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது

அ.இ.அ.தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது

புதன், மார்ச் 09,2016,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அ.இ.அ.தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. 234 தொகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் வகையில், வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து, கழக நிர்வாகிகளுக்கு கையேடுகள் வழங்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. மோக வெற்றிபெறும் வகையில், ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூரில், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சிறுனியம் P. பலராமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் வகையில், பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான கையேடுகளை, பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கினார்.

அம்பத்தூர் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இருவேறு இடங்களில் நடைபெற்ற வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக் கூட்டத்தில், பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு, வாக்கு சேகரிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டதுடன், வாக்காளர்களை சந்தித்து, ஆதரவு திரட்டுவது தொடர்கான கையேடுகளும் வழங்கப்பட்டன.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டக் கழகச் செயலாளர் திரு. என். தளவாய் சுந்தரம், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அயராது பாடுபடவேண்டும் என அறிவுரை கூறினார்.

இதனிடையே, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தடையற்ற மின்சாரம் மற்றம் பல்வேறு சிறப்பு நலத்திட்டங்களை வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்ததுடன், அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற ஒட்டுமொத்த கிராம மக்களும் வாக்களிப்பதாக முடிவெடுத்துள்ளனர்.