அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , மார்ச் 07,2016,

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு அமைப்பு ரீதியாக செயல்படும் 50 மாவட்டங்களின் நிர்வாகிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு கூடுதல் நிர்வாகிகள் மற்றும் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-
சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர்
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள்- பி.கார்த்தியாயினி (வேலூர் மாநகராட்சி மேயர்), வி.வி.ஆர்.ராஜ் சத்யன், எம்.சத்யன் சுந்தரராஜன்.
வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.சசிரேகா, வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஜெ.பிரபு சங்கர், செயலாளர் எஸ்.சந்துரு, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.முத்துகுமார், செயலாளர் ஜெ.சசிகுமார், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் பாக்யலட்சுமி, செயலாளர் வி.பி.ராகவேந்திர ராவ் (எ) ராயல் ராஜா,
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் என்.ராஜராஜன், செயலாளர் கே.பிரவின்குமார், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ஆர்.தீனதயாளன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.தமிழரசன், செயலாளர் ஜி.புகழேந்தி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.பாலாஜி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ஜே.நிர்மல் குமார், செயலாளர் சரவணன் கஜேந்திரன்,
இவர்கள் தவிர அந்தந்த மாவட்டத்துக்கு துணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், துணைச்செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் போல மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியிலான மொத்தம் 50 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.