அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் திருத்தியமைப்பு ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் திருத்தியமைப்பு ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , நவம்பர் 03,2016,

சென்னை : புதுச்சேரி மாநிலம் – நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலை திருத்தயமைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 19-ம் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு திருத்தி அமைக்கப்படுகிறது.

நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்:
1.சி.வி. சண்முகம் (சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர்).
2.எம்.சி.. சம்பத் (கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர், தொழில் துறை அமைச்சர்).
3.செ. செம்மலை (எம்.எல்.ஏ., அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்).
4.சொரத்தூர் இரா. ராஜேந்திரன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்).
5.பெ. புருஷோத்தமன் (புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர்).
6.கண்ணன் (புதுச்சேரி மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர்).
7.அன்பழகன் (எம்.எல்.ஏ, புதுச்சேரி மாநில சட்டமன்றக்குழு கழக தலைவர்)
8. ஓமலிங்கம் (காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர்)
9. கோகுலகிருஷ்ணன் (எம்.பி.).

இந்த திருத்தப்பட்ட பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்ற பொறுப்பாளர்களுடன் கூடுதலாக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பி.கண்ணன், மாநில சட்டமன்றக்குழு கட்சி தலைவர் அன்பழகன், காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம், என். கோகுலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.