அ.தி.மு.க நாடாளுமன்ற, மாநிலங்களவை குழு நிர்வாகிகள் பட்டியல்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க நாடாளுமன்ற, மாநிலங்களவை குழு நிர்வாகிகள் பட்டியல்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜூலை 14,2016,

சென்னை : அ.தி.மு.க நாடாளுமன்ற,  மாநிலங்களவை குழு நிர்வாகிகள் பட்டியலை அ.தி.மு.க பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-

அ.தி.மு.க நாடாளுமன்றக்குழு மற்றும் மாநிலங்களவை குழு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு  நியமிக்கப்படுகிறார்கள்

அதிமுக நாடாளுமன்றக்குழு நிர்வாகிகள்:

தலைவர் டாக்டர் பி.வேணுகோபால்,
துணைத்தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்
அ.தி.மு.க நாடாளுமன்ற மாநிலங்களவை நிர்வாகிகள்:
தலைவர்: ஏ.நவநீதகிருஷ்ணன்,
துணைத்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
கொறடா விஜிலா சத்யானந்த்
பொருளாளர் ஏ.கே. செல்வராஜ்
செயலாளர் ஏ.விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.