அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா தஞ்சை பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா தஞ்சை பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார்

சனி, மே 07,2016,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதமைச்சர் ஜெயலலிதா தஞ்சையில் நாளை பேசுகிறார்.
தமிழக முதமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
பின்னர் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தஞ்சை, திருவையாறு, பாபநாசம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி, திருவிடைமருதூர், ஒரத்தநாடு, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி என 18 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.
முதமைச்சர் ஜெயலலிதா பேசுவதற்காக பிரமாண்டமான பிரசார மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேடையில் இருந்து பார்த்தால் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து மக்களையும் பார்க்கும் வகையில் உயரமாகவும், விசாலமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அமரும் மேடையின் முன்பக்கம் 18 தொகுதி வேட்பாளர்களும் அமரும் வகையில் மேடை அமைக்கப்படுகிறது.
பெண்கள் அமருவதற்கு வசதியாக தனியாக இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மைதானத்தை சுற்றிலும் முதல்–அமைச்சரின் பிரமாண்ட உருவப்படங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மைதானத்திற்கு நுழையும் பகுதியில் அலங்கார பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும் முதமைச்சரை வரவேற்று பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளன.
போலீஸ் பாதுகாப்பு
அங்கிருந்து காரில் புறப்பட்டு பிரசார மேடைக்கு செல்லும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பிரசார மேடையில் 18 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார். கூட்டம் முடிந்தவுடன் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு காரில் புறப்பட்டு செல்லும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.