ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவிக்கு,ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாதந்தோறும் 11,250 ரூபாய் நிதியுதவி,தந்தை வேலுச்சாமிக்கு சமையலர் பணி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவிக்கு,ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாதந்தோறும் 11,250 ரூபாய் நிதியுதவி,தந்தை வேலுச்சாமிக்கு சமையலர் பணி  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சனி, ஜூலை 02,2016,

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, மாதந்தோறும் 11,250 ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் உடுமலையில் சங்கர் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி கவுசல்யாவும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவுசல்யாவின் பொருளாதார நிலையைக் கருதி, உரிய நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, ஆதிதிராவிட நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம் மாதந்தோறும், கவுசல்யாவுக்கு 11,250 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சங்கரின் தந்தை வேலுச்சாமியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு உண்டு உறைவிடப் பள்ளியில் சமையலர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தமிழக அரசின் பசுமை வீடும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மடத்துக்குளம் அருகேயுள்ள பெருமாள்புதூர் அரசு ஆதிதிராவிடர் தங்கும் விடுதியில் திரு.வேலுச்சாமி தற்போது பணியாற்றி வருகிறார்.