ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது ; அமைச்சர் திரு.காமராஜ்

ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது ; அமைச்சர் திரு.காமராஜ்

வியாழன் , அக்டோபர் 27,2016,

ஆதார் அட்டை பதிவுகளை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது என்றும், கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனி மற்றும் ஐஸ்ஹவுஸ் பகுதியில் அமுதம் மற்றும் கூட்டுறவு நியாயவிலைக் கடையில், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.காமராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, மாத ஒதுக்கீட்டின் அடிப்படையில், அத்தியாவசியப் பொருட்கள், சீரான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை அமைச்சர் உறுதி செய்தார். ஆதார் அட்டை பதிவுகளை மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது என்றும், இதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். பொருட்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே, அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு குடும்ப அட்டைதாரர்கள் நன்றி தெரிவித்தனர்.