ஆர்.கே.நகர் தொகுதி பாமக வேட்பாளர் ஆக்னஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்

ஆர்.கே.நகர் தொகுதி பாமக வேட்பாளர் ஆக்னஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்

வியாழன் , ஏப்ரல் 28,2016,

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாமக வேட்பாளராக ஆக்னஸ் போட்டியிடுகிறார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி வீடு ஒதுக்கீடு பெற்றுத்தருவதாக கூறி 1000க்கும் மேற்பட்டோரிடம் ஆக்னஸ் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் இருந்து  60ஆயிரம் முதல் 1லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  பணம் கொடுத்தவர்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளையும் அவர் வழங்கியுள்ளார். எனினும் வாக்களித்தபடி வீடுகளை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் காண்பித்தபோது அவை போலி ஒதுக்கீடு ஆணைகள் என்பது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மோசடியில் ஈடுபட்ட  பாமக வேட்பாளர் ஆக்னஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரணிபிரசாத்  ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்